பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசு!! வட்டியை கணக்கில் வரவு வைக்க தொடங்கியது அரசு, உடனே செக் பண்ணுங்க

EPFO Update: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் அறிவித்தபடி, வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் வட்டி வரவு வைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
: அலுவலக பணிகளில் பணிபுரியும் அனைவரிடமும் பெரும்பாலும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் பிஎஃப் கணக்கு இருக்கும். இதில் ஊழியர்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துகிறார்கள். ஊழியர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் பணிபுரியும் நிறுவனமும் அவர்களது கணக்கில் அதே அளவு தொகையை செலுத்துகிறது. எனினும், நிறுவனம் செலுத்தும் தொகையில் ஒரு பகுதி இபிஎஃப் -க்கும் ஒரு பகுதி இபிஎஸ் -க்கும் செல்கிறது. பொதுவாக இபிஎஃப் -இல் டெபாசிட் செய்யப்படும் பணம் பணி ஓய்வு காலத்தை கருத்தில்கொண்டே சேமிக்கப்படுகின்றது. எனினும், அதற்கு முன்னரும் அவசர தேவைகளோ, அத்தியாவசிய தேவைகளோ ஏற்பட்டால், இந்த தொகை நமக்கு கை கொடுக்கிறது.
பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் அறிவித்தபடி, வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளில் வட்டி வரவு வைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இபிஎஃப்ஓ ஏற்கனவே 24 கோடிக்கும் அதிகமான கணக்குகளில் வட்டித்தொகயை வரவு வைத்துபிட்டது என சமீபத்தில் கூறியிருந்தார். 2022-23 நிதியாண்டில், இபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உள்ளது.


இபிஎஃப் கணக்குகளில் (EPF Account) வட்டி வரவு வைப்பதற்கான காலக்கெடு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, "செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. வட்டித்தொகை பற்றிய விவரம் விரைவில் கணக்குகளில் பிரதிபலிக்கும். வட்டி வரவு வைக்கப்பட்டவுடன், அது சேர்க்கப்பட்டு முழுமையாக செலுத்தப்படும், ஆகையால் வட்டி (PF Interest) இழப்பு ஏற்படாது. தயவு செய்து பொறுமையாக இருங்கள்." என இபிஎஃப்ஓ தெளிவுபடுத்தியது.
இபிஎஃப் கணக்கு இருப்பை எவ்வாறு செக் செய்வது?

கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டதும், இபிஎஃப் (EPF) உறுப்பினர்கள் அதை தங்கள் பிஎஃப் கணக்கில் பார்க்கலாம். வருங்கால வைப்பு நிதி கணக்கின் இருப்பை செக் செய்ய பல வழிகள் உள்ளன:

உமங் செயலியைப் பயன்படுத்தி வட்டித்தொகையை சரி பார்க்கும் முறை: 

- Google Play Store அல்லது Apple App Store இலிருந்து 'UMANG' செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.

- EPFO சேவைகளுக்கான செயலியில் பதிவு செய்யவும்.

- 'Service' என்பதற்குச் சென்று, 'Employee-centric service' என்பதன் கீழ் 'View Passbook' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் EPF பாஸ்புக்கை அணுகவும் உங்கள் இருப்பைச் சரிபார்க்கவும் OTP சரிபார்ப்பு உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.

மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை... கச்சா எண்ணெய் விலையில் சரிவு... தீபாவளிக்கு நல்ல செய்தி கிடைக்குமா!

EPFO போர்ட்டலைப் பயன்படுத்தி வட்டித்தொகையை சரி பார்க்கும் முறை: 

- EPFO இன் இணையதளத்திற்கு செல்லவும். 

- 'Our Services' என்பதற்குச் சென்று, 'For Employees' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் விவரங்களை அணுக, 'Services' என்பதன் கீழ் உள்ள 'Member Passbook' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

எஸ்எம்எஸ் அனுப்பி பிஎஃப் கணக்கு இருப்பை பார்க்கும் முறை: 

- உங்கள் யுஏஎன் (UAN) இபிஎஃப்ஓ உடன் இணைக்கப்பட்டிருந்தால், 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உங்கள் பங்களிப்பு மற்றும் பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம்.

- EPFOHO UAN ENG, இதில் 'ENG' என்பது விருப்பமான மொழியைக் குறிக்கிறது (எ.கா., தமிழுக்கு TAM. )

மிஸ்டு கால் மூலம் கணக்கு இருப்பை செக் செய்யும் முறை:

- பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து கணக்கு விவரங்களைப் பெறலாம்.

- எனினும், இதற்கு அவர்களின் பான், ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 

- இந்தத் தகவலை பெற ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனமும் உதவலாம், இந்த சேவைக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. 

Comments

Popular posts from this blog

உலக கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்?? வெளியான முக்கிய தகவல்!!

மூத்த குடிமக்களுக்கு அருமையான திட்டம்... மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்