Posts

பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசு!! வட்டியை கணக்கில் வரவு வைக்க தொடங்கியது அரசு, உடனே செக் பண்ணுங்க

Image
EPFO Update: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் அறிவித்தபடி, வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் வட்டி வரவு வைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. : அலுவலக பணிகளில் பணிபுரியும் அனைவரிடமும் பெரும்பாலும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் பிஎஃப் கணக்கு இருக்கும். இதில் ஊழியர்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துகிறார்கள். ஊழியர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் பணிபுரியும் நிறுவனமும் அவர்களது கணக்கில் அதே அளவு தொகையை செலுத்துகிறது. எனினும், நிறுவனம் செலுத்தும் தொகையில் ஒரு பகுதி இபிஎஃப் -க்கும் ஒரு பகுதி இபிஎஸ் -க்கும் செல்கிறது. பொதுவாக இபிஎஃப் -இல் டெபாசிட் செய்யப்படும் பணம் பணி ஓய்வு காலத்தை கருத்தில்கொண்டே சேமிக்கப்படுகின்றது. எனினும், அதற்கு முன்னரும் அவசர தேவைகளோ, அத்தியாவசிய தேவைகளோ ஏற்பட்டால், இந்த தொகை நமக்கு கை கொடுக்கிறது. பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் அறிவித்தபடி, வர

மூத்த குடிமக்களுக்கு அருமையான திட்டம்... மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்

Image
அடல் பென்ஷன் யோஜனா: எந்தவொரு பணப்பிரச்சினையும் இன்றி முதுமைக்காலத்தை ஆனந்தமாக கழிய வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருவரும் தங்களின் சம்பாத்தியத்தில் இருந்து சேமிக்கின்றனர். வயதான காலத்தில் எந்தவித கஷ்டமும் இல்லமல் இருப்பதற்கான மிகப்பெரிய ஆதரவாக ஓய்வூதியம் கருதப்படுகிறது, ஆனால் நாம் சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். வயதான காலத்தில் இளமை காலம் போல் ஓடி ஓடி உழைக்க முடியாத நிலையில், உங்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு நீங்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் போது, ​​இந்த ஓய்வூதியம் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். நீங்கள் இளைஞராக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் உங்கள் ரிடயர்மென்ட் காலத்தில் பொருளாதார ரீதியாக வளமாக்க முடியும், மேலும் நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. உத்தரவாதமான ஓய்வூதியம்: ரிடயர்மென்ட் காலத்தை ஆனந்தமாக அனுபவிக்கும் கனவை நீங்கள் அரசு நடத்தும் அடல் பென்ஷன் யோஜனா மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இது ஒரு ஓய்வூதியத் திட்டம்ஆகும், மேஉமி இந்த திட்டதிற்கு அரசாங்கமே

தோவாளையில் ஒரு கிலோ பிச்சி - மல்லிகை ரூ.1000-க்கு விற்பனை

Image
📝பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகளும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரளி ரூ.200, சம்மங்கி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.200, கிரேந்தி ரூ.50, கனகாம்பரம் ரூ.400, ஆரல்வாய்மொழி : குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூ சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, குமாரபுரம், புதியம்புத்தூர், ஆவரைகுளம், ராதாபுரம் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூ, மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, சங்கரன்கோவில், ராஜ பாளையம், கோவில்பட்டி ஆகிய இடத்தில் இருந்து மல்லிகை பூவும், திருக் கண்ணங்குடி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரோந்தி, பட்டர் ரோசும், சேலத்தில் இருந்து அரளி பூவும், தோவாளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சம்பங்கி பூ, ரோஸ் கோழி கொண்டை அருகம்புல், தாழம்பூ ஆகியவைகள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தோவாளை சந்தையில் ஒரு கிலோ பிச்சி பூ மற்றும் மல்லிகை பூ கிலோ ரூ.1000-க்கும் இன்று விற்பனையானது. அரளி ரூ.200, சம்மங்கி ரூ.250, கோழிக்க

உலக கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்?? வெளியான முக்கிய தகவல்!!

Image
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி போட்டியை எதிர்நோக்கி அரங்கேறுகிறது. இந்த தொடரின், லீக் சுற்று போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மீதமுள்ள ஓர் இடத்திற்கு 3 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில், நியூசிலாந்து அணி 9 போட்டிகள் முடிவில் 10 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. மேலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 8 போட்டிகள் முடிவில் 8 புள்ளிகள் பெற்றுள்ளதால், இந்த அணிகள் தங்களது கடைசி போட்டியை வென்றால் அரையிறுதிக்கு முன்னேறும் அணியை ரன்ரேட் அடிப்படையிலேயே தேர்வு செய்ய இயலும். இதில், பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக வென்று அரையிறுதி செல்ல, இந்த 5 வழிகள் மட்டுமே உள்ளது. இதில், ஏதேனும் நடந்து பாகிஸ்தான் வெற்றி பெற்றால், இந்திய அணிக்கு எதிராக இந்த உலக கோப்பையில் மீண்டும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.